Saturday, December 14, 2013

Yes or No???

குளிந்த  டிசம்பர் மாதம், அதிகாலை 7 மணி; அன்று  ஒரு முக்கியமான நாள்;  எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தனர் என் வீட்டில்; பல பேரிடம் விசாரித்து பல பெண்களிலிருந்து ஒருவர்  என்று  முடிவு செய்யும் வேளை. அனைவருக்கும் இருப்பது போல் எனக்கும் ஆயிரம் கனவுகள், தலை கால் புரியாத நிலை.

அன்று தான் நான் எனக்கு பார்த்த ஒரு  பெண்ணை சந்தித்து, கலந்து பேசி, முடிவு செய்யும் தருணம்.  இரவில் தூக்கம் செரியாக வரவில்லை. அதே எதிர்பார்போடு விடிந்தது அந்த காலை.

Annanagar, Madras; Coffee Shop - 8:55 AM :-

எந்த meeting க்கும் செரியா ன நேரத்தில் போகாத நான் 5 நிமிடத்திற்கு முன்னால் சென்ற ஆச்சர்யம் அன்று .

அதோ அவள் வந்தாள்; சரியாக 9 மணி; இருக்கையில் இருந்து எழுந்தேன், வரவேற்றேன்; அமர்ந்தேன்; 

"Hello" என்றால் ஒரு சிறிய புன்னகையுடன் ...

"Hello, Thanks for coming. எப்டி இருக்கீங்க?" என்று வழக்கமாக தொடங்குவது போல் தொடங்கினேன்!

"Hmm நல்ல இருக்கேன்";
 "இந்த meeting எவ்ளோ நேரம் இருக்கும்?", என்று எதில்  தொடங்குவதென்று  தெரியாமல் கேட்டாள்.  

"நீங்கள் எப்போ வேன்னாலும் கை குலுக்கீட்டு கெலம்பலாம்; நமக்கு  15 minutes போதும்னு  நான் anticipate பன்றேன். நம்ம order  பண்ண coffee ய குடிச்சு முடிக்கறவரைக்கும் " 

நாங்கள் இருவரும் order பண்ண Coffee வந்தது;

"What do you know about me yet?" என்று பேச்சை ஆரம்பித்தாள் . I actually thought it was a good conversation starter.

" Hmm...உங்கள பத்தி???...
   உங்க பேரு மீனா னு தெரியும். 
   நீங்க ஒரு Architect;
   நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசுறாங்கன்னு தெரியும்
   So far so much" 

என்று சொன்னேன்.

"நீங்க என்ன இந்த கேள்வி கேக்கவே இல்லையே!" என்றாள் 

"சொல்லுங்களேன். Let me listen to you talk" என்று கையை கன்னத்தில் வைத்து கேக்க தயாரானேன்.

"Nothing; Just curious. That is why I am here to meet you today." இந்த girls ரொம்ப brilliant, தேவைக்கு அதிகமா ஒரு வார்த்த பேச மாட்டங்க. 

"True. I am very curious too...
'Meena' எனக்கு ரொம்ப புடிச்ச பேரு. 
அம்மா photo காமிச்சாங்க; என்னமோ சரி ன்னு பட்டுச்சு. மத்த photo க்கள் பாத்த போது ஏற்படாத feeling" என்றேன் என்  Coffee mug யில் ஒரு sip குடித்தபடி;  

அதை தொடர்ந்து ஒரு நொடி நிறைந்த மௌனம். இருவரும் பேசவில்லை. இருவர் கண்களும் ஒரு முறை சந்தித்தது முதல் முறையாக.

நான் எதாவது சொல்லணும் conversation னை நகர்த்தி செல்ல, "You seem to be a studious person" என்றேன் அசட்டுத்தனமாக.

"நீங்களும் தான்; உங்க Specs அப்படியே காமிச்சு  குடுதுருச்சு"

"என் கண்ணாடிய நம்பவே நம்பாதிங்க. நான் Engineering படிச்சேன்னு தான் பேரு ஆனா அத பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது"

"உங்களுக்கு Cricket ரொம்ப பிடிக்குமாம்மே?"

"ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் ஒரு Cricket பைத்தியம். In fact, Cricket is my first wife."

"Oh, அப்டியா...Why are you looking for another wife then? என்று கேட்டாள் ஒரு அசட்டுச் சிரிப்போடு.

"Perhaps to love me in return. Cricket என்னோட ஒரு தலை காதல்; Cricket என்ன திரும்பி love பண்ணவே மாட்டேன்குது...
Talking about first loves, உங்க first love என்ன?" என்று சாதுரியமாக வினவினேன்.

"Coffee!!! இந்த coffee க்கு Thanks to you."  என்றாள் புருவத்தை உயர்த்தியபடி சிரித்து கொண்டே சாமர்த்தியமாக . 

மறுபடியும் மௌனம் . நான் அவளை ஒரு நொடி கண் இமைக்காமல் பார்த்தேன். கவிதையாய் இருந்தது.

Marriage பற்றி  அவளின் opinion யை கேட்க வேண்டும் என்று தோன்றியது. சரியான சந்தர்பத்திற்கு கூட பொறுக்காமல், " What is marriage, உங்களை பொறுத்த வரையில்?" என்று கேட்டுவிட்டேன்.

"Living for each other" என்று பளிச்சென்று  பதிலளித்தல்; விழுந்தே விட்டேன்.

அவளின் அளந்த பேச்சும் அமைதியான அழகும் என்னை சாய்த்து விட்டது.

"BILL  Please",  என்று I called for the bill.

"எனக்கு நான் கொடுக்குறேன், நீங்க உங்களுக்கு கொடுங்க" என்று திட்டவட்டமாக கூறினாள்.

"ஏன்??? நான் கொடுக்ககுடாத?" என்று கோவித்தபடி கேட்டேன் .

"நீங்க ஏன் எனக்கு கொடுக்கணும்?"

"வீட்டுக்கு போன  அம்மா அப்பா கேப்பாங்க, சம்மதமானு...'பிடிச்சிருக்கு' னு சொல்ல போறேன்...இப்போ நான் உன் coffee க்கு pay பண்ணலாமா ?"

            
               அகண்ட கண்கள், ஒரு  நிறைந்த பார்வை, கீழ் உதட்டின் ஓரத்தில் சிறு புன்னகை; வேறொன்றும் இல்லை பேசுவதற்கு. அவளின் அந்த மௌனமே எனக்கு சம்மதம் தெரிவித்தது. 
எழுந்தாள், திரும்பினாள், நடந்து சென்றாள்.

இக்கற்பனை மீனாள் உண்மையாக வேண்டி,
விக்னேஷ் நாகப்பன், அண்ணாமலை